fbpx

இவர் டீச்சரா அல்லது பெண் ரவுடியா? 5ம் வகுப்பு மாணவியின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஆசிரியை!

தற்போதைய காலகட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்ற காரணத்தை முன்வைத்து அவர்களை தாக்குவது உள்ளிட்ட துன்புறுத்தலை ஒருபோதும் செய்யக்கூடாது என்று அரசாங்கம் கண்டிப்பாக தெரிவித்திருக்கிறது.

இவ்வளவு ஏன், மாணவ மாணவிகள் தவறு செய்தால் கூட அவர்களிடம் முடிந்த அளவு எடுத்துக் கூறிதான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவர்கள் மீது எந்த காரணத்தை முன் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிரப்பித்திருக்கிறது.ஆனால் அரசாங்கத்தின் இந்த உத்தரவை மீறும் விதமாக டெல்லியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

டெல்லி நிகாம் நகர் பகுதியில் பிராத்மிக் வித்யாலயா என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியராக இருப்பவர் கீதா கேஸ்வால் இவர் நேற்றைய தினம் அந்த பள்ளியில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்காக வகுப்பறைக்கு வந்திருக்கிறார். காலை 11 மணி அளவில் ஆசிரியை கீதா பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, 5ம் வகுப்பு படிக்கும் வந்தனா என்ற சிறுமி பாடத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மாணவி வந்தனா மீது அந்த ஆசிரியை கோபப்பட்டதாக தெரிகிறது, அந்த கோபத்தின் மிகுதியாக அந்த மாணவியை ஆசிரியை கீதா மிகக் கடுமையாக தாக்கி இருக்கின்றார். அத்துடன் கத்தரிக்கோலை வைத்து மாணவியின் தலைமுடியை வெட்டியும், உடலில் தாக்குதல் நடத்தியும் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறார்.

வகுப்பின் ஆசிரியை போல இல்லாமல் சைக்கோவை போல செயல்பட்ட அந்த ஆசிரியை அத்துடன் நின்று விடாமல் அந்த மாணவியை 5ம் வகுப்பறை முதல் மாடி ஜன்னலிலிருந்து கீழே தள்ளி உள்ளார். இந்த கொலை வெறி தாக்குதல் காரணமாக, அந்த மாணவி படுகாயமடைந்தார். கீழே விழுந்த மாணவியை அந்த பகுதியை சார்ந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட ஆசிரியை கீதாவை அந்த பகுதி மக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்திக்கிறார்கள்.

ஆசிரியை கீதாவை கைது செய்த டெல்லி காவல்துறை, வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்திருக்கிறது. அவர் மீது 307வது பிரிவின் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை இணை ஆணையர் சுவேதா சவுகான் தெரிவித்திருக்கிறார். அத்துடன் மாணவியின் சிகிச்சையின் செலவை ஏற்பதாக டெல்லி மாநகராட்சி அறிவித்திருக்கிறது. அதோடு, இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை கேட்டு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

Next Post

சொத்தின் மேல் உள்ள ஆசையால் சொந்த தம்பியை கம்பியால் அடித்துக் கொன்ற இளைஞர்!

Sat Dec 17 , 2022
தற்போதைய காலகட்டத்தில் நம்முடைய சந்ததிகள் வளர வேண்டும் என்று வாரிசுகளை பெற்றுக் கொள்வதைப் போல அவர்களுக்கு சரிசமமான முறையில் சொத்துக்களை சேர்த்து வைப்பதும் அவசியமாகிறது. முன்பெல்லாம் அண்ணன், தம்பி என்றால் மிகவும் பாசப்பிணைப்புடன் இருப்பார்கள். அண்ணன் மீது வேறு யாராவது தவறு சொன்னாலும், அல்லது யாராவது அடித்து விட்டாலோ உடன் பிறந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அண்ணன், தம்பி பாசம் என்பது முன்னொரு காலத்தில் இருந்தது. ஆனால் […]

You May Like