fbpx

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது……! தென்காசியில் பரபரப்பு……!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியார் பட்டியை சேர்ந்தவர் ராஜதுரைலிங்கம்(43) அதை தொகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்த சூழ்நிலையில் ஒரு மாணவரை சக மாணவர்கள் முன்னிலையில் பாலியல் ரீதியாக கேலி கிண்டல் உள்ளிட்டவையை செய்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக, மனமுடைந்த அந்த பள்ளி மாணவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தது தொடர்பாக பெற்றோர் கேள்வி எழுப்பியபோது அந்த மாணவன் தனக்கு நடந்தது தொடர்பாக தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து, மாணவனின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கின்றனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

காவல்துறையினரின் விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆசிரியர் ராஜதுரைலிங்கம் மீது போக்சோ, தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதனை எடுத்து அவரை ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Post

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…..! புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி…..!

Fri Feb 24 , 2023
இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் கோப்பை நடந்து வருகிறது.4டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கூட்டம் 2 டெஸ்ட் போட்டி ஏற்கனவே நடைபெற்று விட்டனர். இந்திய அணி 2-0 என முன்னிலையில் இருக்கிறது இரு அணிகளும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு நடுவே பார்டெர் கராஸ்கர் கோப்பை தொடரில் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக செயல்பட்ட பேட் […]
அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்..! அசத்தல் பேட்டிங்கால் அபார வெற்றி..!

You May Like