fbpx

தூங்கும்போது தொந்தரவு செய்த அண்ணன்… தம்பி செய்த செயலால் பதறும் குடும்பத்தினர்..!

பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகில் உள்ள முளையன் காவில் வசிப்பவர் சர்வர் பாபு (24). இவரது தம்பி சக்கீர்(18). நேற்று இரவு 10 மணியளவில் அண்ணன் சர்வர் பாபு தனது செல்போனில் சத்தத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அவரது தம்பி சக்கீர், சத்தத்தை குறைத்து வை தூங்குவதற்கு தொந்தரவாக உள்ளது என கூறியுள்ளார்.

ஆனால் இது எதையும் காதில் வாங்காத அண்ணன் பாபு சத்தத்தை குறைத்து வைக்காமல் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். இதில் கோபமடைந்த தம்பி எழுந்து சென்று, பின் பின்பக்கத்தில் இருந்து ஒரு மரக்கட்டையை எடுத்து வந்து தனது அண்ணனை அந்த மரக்கட்டையால் தலையில் ஓங்கி பலமுறை அடித்துள்ளார். இதனால் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் அண்ணன் மயங்கி விழுந்தார்.

அண்ணனை அந்த நிலையில் பார்த்த சக்கீர் பிறகு அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சர்வர் பாபுவை கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அண்ணன் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். விவரம் அறிந்த காவல்துறையினர் தம்பி சக்கீரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Rupa

Next Post

’திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 12.48 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன’..! - அமைச்சர் சக்கரபாணி

Tue Aug 2 , 2022
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 12,48,000 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”விவசாயிகளிடத்தில் வாங்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என முதலமைச்சர் விரும்புகிறார். கடந்த 10 ஆண்டுகளில் செய்யாத பணிகளையெல்லாம் திமுக அரசு செய்து வருகிறது. 12,48,000 குடும்ப அட்டைகள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வழங்கப்பட்டுள்ளது. 12,50,000 […]
’இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது’..!! அமைச்சர் சக்கரபாணி முக்கிய அறிவிப்பு..!!

You May Like