என்னதான் இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது என்று சொன்னாலும், இன்னமும் அடுத்தவர்களிடம் கடன் வாங்கும் மனிதர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த வகையில், சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்( 66) இவருடைய மனைவி சாந்தி (55) இந்த தம்பதியருக்கு ராமு, ராமவேல் என்ற மகன்களும் தமிழரசி என்ற மகளும் இருக்கிறார்கள் இவர்கள் எல்லோரும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
மகன்கள் இருவரும் மாடியிலும், பெற்றோர் வீட்டின் கீழ் தளத்திலும் வசித்து வந்தனர். இந்த நிலையில் தான் நேற்று காலை ராமவேல் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்தபோது, வீடு திறந்து கிடந்தது உள்ளே நுழைந்து பார்த்த போது தாயும் தந்தையும் உயிரிழந்து கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராமவேல் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு விசாரணையை மேற்கொண்டனர்.
ராஜேந்திரன் பூர்வீகமாக வசித்து வந்த வீட்டை அதே பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரிடம் 5 வருடத்திற்கு முன்னர் அடமானம் வைத்து 19 லட்சம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
அதற்கு நடேசன் வட்டியும் அசலுமாக 40 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் வீட்டை எழுதி கொடுக்க வேண்டும் எனவும் அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்திருக்கிறார் நடேசன்.இதனால் அசோக் என்பவரிடம் வீட்டை விட்டுவிட்டு கடனை கொடுத்துவிட ராஜேந்திரன் முடிவு செய்தார்.
இந்த நிலையில் தான் நடேசன் நேற்று முன்தினம் மறுபடியும் பணம் கேட்டதால் மனம் முடைந்த ராஜேந்திரன், சாந்தி தம்பதியினர் விஷமறிந்தி தற்கொலை செய்து கொண்டனர் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
அத்துடன் அந்த வீட்டிலிருந்து ஒரு கடிதம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
அந்த கடிதத்தில் எங்களது தற்கொலைக்கு காரணம் நடேசனும், அவருடைய குடும்பத்தினரும் தான் என்று கந்துவட்டிக் கொடுமை தொடர்பாக எழுதப்பட்டிருந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.