fbpx

மது போதையின் உச்சத்தில் இருந்த தந்தை… மகனின் தலையில் குழவிக்கல்லை போட்ட கொடூரம்..!

கடலூர் புதுப்பேட்டை, பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையத்தில் உள்ள இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (38). இவருடைய மனைவி சுமதி (32). இந்த தம்பதிக்கு லதா (11), நந்தினி (7) என இருமகள்கள் உள்ளனர். அர்ஜூனன் (14) என்ற மகன் இருந்தான். மகன் அர்ஜூனன், அங்குசெட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். முருகன் சிறுவத்தூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தனது குடும்பத்தினருடன் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். முருகன் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மீண்டும் முருகன் குடித்துவிட்டு வந்து மனைவி சுமதியிடம் தகராறு செய்துள்ளார். இதைபார்த்து கோபமடைந்த அர்ஜூனன், தனது தந்தையிடம் ஏன் இப்படி குடித்துவிட்டு வந்து அம்மாவிடம் தகராறு செய்கிறீர்கள் என தட்டிக்கேட்டுள்ளான். இதையடுத்து முருகன் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அர்ஜூனன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான்..
நள்ளிரவு ஒரு மணி அளவில் மீண்டும் குடித்துவிட்டு முருகன் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவரை தாக்க முயன்றுள்ளார். அவரிடம் இருந்து சுமதி தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில் அளவுக்கு அதிகமான மதுபோதையில் கோபத்தின் உச்சத்தில் இருந்த முருகன் தனது மகன் என்றும் பாராமல் அங்கு தூங்கிக்கொண்டிருந்த அர்ஜூனனின் தலையில் குழவி கல்லை தூக்கிப் போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அர்ஜூனன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து தகவலின் அடிப்படையில் புதுப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அர்ஜூனன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்தனர். மதுபோதையில் பெற்ற மகன் மீது குழவி கல்லை தூக்கிப்போட்டு தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Baskar

Next Post

அக்னிபாத் வன்முறை..! ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்திய 2,600 பேர் கைது..! மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்..!

Wed Jul 20 , 2022
’அக்னிபாத் திட்டம்’ அறிவிக்கப்பட்டபோது ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. ’அக்னிபாத் திட்டம்’ அறிவிக்கப்பட்டபோது நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்தன. ரயில் நிலையங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், ரயில்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை? இழப்பு ஏற்பட்ட ரயில்வே சொத்தின் மதிப்பு மற்றும் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களா? என மக்களவையில் உறுப்பினர் விஜய் […]
அக்னிபாத் வன்முறை..! ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்திய 2,600 பேர் கைது..! மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்..!

You May Like