கன்னியாகுமரியில், கள்ளக்காதலனை கொடூரமாக ஷிபா என்ற பெண் கொலை செய்துள்ளார். ஆரல்வாய்மொழியில் உள்ள இ.எஸ்.ஐ. ஹாஸ்பிடல் காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மேலும் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை வேலை நேரம் ஆகும். இந்த இடைப்பட்ட நேரத்தில் அங்கு வேலை செய்யும் சதீஷ்குமார் அவரது கள்ளக் காதலி ஷிபாவை சந்திக்க விரும்பினார். எனவே அவரை தொடர்பு கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருமாறு அழைத்தார்.
ஏற்கனவே ஷிபா, ரதீஷ்குமாரை கொலை செய்யும் மனநிலையில் இருந்துள்ளார். எனவே ஹாஸ்பிடலில் ரதீஷ்குமாரை கொல்வது எப்படி? என திட்டம் போட்டார். இதற்காக கத்தி மற்றும் பெரிய குத்தூசியை, எடுத்துக் கொண்டார். மேலும் தூக்க மாத்திரையும் எடுத்துக் கொண்டார். கத்தியால் குத்தும் போது ரதீஷ்குமார் தடுத்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்ததால் ரதீஷ்குமாரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று தீர்த்து கட்டலாம் என்ற மாற்று திட்டத்தை போட்டார்.
கொலை செய்யும் திட்டத்துடன் ஹாஸ்பிடலுக்கு வந்த ஷிபா அங்கு ரதீஷ்குமாருடன் நெருக்கமாக பேசியபடி உணவு பரிமாறியுள்ளார். அந்த சமயத்தில் அவர் நைசாக தூக்க மாத்திரையை உணவில் கலந்து தனது திட்டத்தை கச்சிதமாக முடித்தார். சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் ரதீஷ்குமார் சிறிது மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அந்த சமயம் பார்த்து ஷிபா திடீரென கத்தி, குத்தூசியை எடுத்து ஆத்திரம் தீர ரதீஷ்குமாரின் உடலின் பல இடங்களில் குத்தினார். எதிர்பாராத இந்த ஆவேச தாக்குதலில் நிலைகுலைந்த ரதீஷ்குமார் அந்த இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், ரதீஷ்குமார் இறந்து விட்டாரா, என உறுதி செய்த பிறகு ஷிபா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட ரதீஷ்குமாரின் உடலில் மட்டும் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் ஷிபா பயன்படுத்திய ஆயுதங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இதற்கிடையே ரதீஷ்குமார் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.