நோய் தொற்று காலகட்டத்தில் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடைபெற்றபோது 11 வயது சிறுமி தன்னுடைய தோழியின் வீட்டிற்கு படிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தோழியின் தந்தை அந்த சிறுமிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமையை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, அடையார் அனைத்து மகளிர் காவல் துறையினர் அந்த நபரை கைது செய்தனர்.
இந்த வாழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி குற்றம் சுமத்தப்பட்ட ரியல் ஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகால கடுங்காமல் சிறை தண்டனையும், மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அதோடு இந்த அபராத தொகையை சிறுமிக்கு வழங்கவும், மேலும் தமிழக அரசு சார்பாகவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 7 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.