மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சொக்ககிழவன்பட்டியை வசித்து வருபவர் ஆண்டிக்காளை (40). டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நெவ்வாயி. சிங்கம்புணரி கோட்டை வேங்கை பட்டியில் வசித்து வரும் இளையராஜாவுக்கும்(39), ஆண்டிக்காளையின் மனைவி நெவ்வாயிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இந்தநிலையில் ஆண்டிக்காளையின் வீட்டில் நெவ்வாயியை ரகசியமாக இளையராஜா நேற்று காலை சந்தித்துள்ளார். அப்போது அதை பார்த்து ஆத்திரம் அடைந்த ஆண்டிக்காளை, அரிவாளால் இளையராஜாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த இளையராஜா அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சார்லஸ், கீழவளவு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து சென்று இளையராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை சம்பவம் குறித்து கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆண்டிக்காளையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் கள்ளக்காதலனை தன் வீட்டிலேயே வைத்து வெட்டிக்கொன்ற சம்பவம அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.