fbpx

தமிழகத்தில் அதிகரித்து வரும் நோய் தொற்று பரவல்…..! வரும் 17ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் முகவசம் கட்டாயம் உயர்நீதிமன்ற பதிவாளர் அதிரடி உத்தரவு….!

தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருக்கின்ற அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீதிமன்றங்களில் அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் போன்ற எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தனிமனித இடைவேளையை பின்பற்ற வேண்டும் எனவும், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல நீதிமன்ற அறை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும், நுழைவாயில் மற்றும் முக்கிய பகுதிகளில் கிரிமிநாசினி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு வழக்கு பட்டியலில் இல்லாத வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வருவது முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Post

ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு.. நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பிரதமர்..

Sat Apr 15 , 2023
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் குண்டுவெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஃபுமியோ கிஷிடா வாகயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி துறைமுகத்திற்குச் சென்றார்.. அங்கு அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரை நோக்கி மர்ம பொருள் ஒன்று விழுந்தது.. எனினும் அது சற்று முன்னரே விழுந்து பெரும் சத்தத்துடன் வெடித்தது.. இதில் பிரதமர் கிஷிடா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.. […]

You May Like