திருச்சி விமான நிலையம் அருகே இருக்கின்ற அவனியா நகரை சேர்ந்தவர் பாலசேகர் (55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் தன்னுடைய உறவினரான கறம்பக்குடி கரு தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கவிதா (40) என்பவருக்கு புதுக்கோட்டை மேட்டுப்பட்டியில் ஜவுளி கடை வைத்து கொடுத்திருக்கிறார். அதோடு பல்வேறு தவணைகளில் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இத்தகைய நிலையில்தான் கொடுத்த பணத்தை பாலசேகர் திருப்பி கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு கவிதா கொடுக்க மறுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு கரு தெற்கு தெருவில் தன்னுடைய வீட்டில் தனியாக இருந்த கவிதாவிடம் பணத்தைக் கேட்டு பாலசேகர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் குண்டை வீட்டில் வீசி இருக்கிறார். இதில் அவருடைய வீடு தீப்பற்றி எரிந்து இருக்கிறது. அதோடு, தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் கவிதாவை நோக்கி சுட்டு இருக்கிறார். இதில் அதிர்ஷ்டவசமாக கவிதா மீது குண்டுபடவில்லை. அதன் பின்னர் அங்கிருந்து பாலசேகர் தப்பி சென்று விட்டார்.
இதற்கு நடுவே அக்கம்பக்கத்தினர் அந்த பகுதிக்கு வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர் அதன் பிறகு இது தொடர்பான தகவலின் அடிப்படையில் வடகாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலசேகரை தயவு செய்து உடன் அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.