fbpx

அடுத்ததாக காத்திருக்கும் ஆப்பு அண்ணாமலை கையிலெடுத்த அடுத்த ஊழல் பட்டியல்….! அதிர்ந்து போன முக்கிய கட்சி….!

திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்பே தெரிவித்திருந்தார். அதோடு, அவர் அணிந்திருக்கும் சர்ச்சைக்குரிய ரபேல் வாட்ச் தொடர்பான திமுகவின் சந்தேகத்தையும் தீர்த்து வைப்பதாக அவர் கூறியிருந்தார்.

அதன்படி இன்று தமிழகத்தின் ஆளும் தரப்பான திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னால் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அண்ணாமலை தான் அணிந்திருக்கும் ரஃபேல் வாட்சின் பில்லை வெளியிட்டார் அண்ணாமலை அந்த வாட்சை சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக அந்த பில்லில் ஆதாரம் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இதன் பிறகு திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, நேரடியாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். டெண்டர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் நிறுவனம் 200 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் இந்த பணம் கடந்த 2011 ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்டதாகவும் கூறி இருக்கிறார்.

அதோடு, அமைச்சர்கள் ஏ.வ. வேலு, கே என் நேரு மற்றும் தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரின் சொத்து பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக போன்ற அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.இதன் காரணமாக, அதிமுக உள்ளிட்ட பல முக்கிய கட்சிகள் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதட்டத்துடனே இருக்கின்றன.

Next Post

தொடர் விடுமுறை.... அதிகரித்த கட்டணம்…..! தமிழக அரசின் எச்சரிக்கையை மீறிய உரிமையாளர்கள்…..!

Fri Apr 14 , 2023
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு வந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்காக இன்று தமிழக முழுவதும் 1000 அரசு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை என்று தொடர் விடுமுறை வந்துள்ளது. இதனால் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர் சென்னையில் உள்ள […]
’கட்டணத்தை தெரிந்து தானே தனியார் பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்கிறார்கள்’..!! - அமைச்சர்

You May Like