தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வி ஆர் பி நாயுடு தெரு பகுதியைச் சேர்ந்தவர் அபூபக்கர் சித்திக் இவருடைய மனைவி ரம்ஜான் பேகம் இந்த தம்பதிகளுக்கு 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மேலும் 13 வயதில் மற்றும் 11 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இந்த தம்பதிகளுக்கு இருக்கின்றனர்.குடும்பத்துடன் வசித்து வருகின்ற அபூபக்கர் சித்திக் அதே பகுதியில் பல சரக்கு கடை நடத்தி வந்தார்.
இந்த சூழ்நிலையில், அபூபக்கர் சித்திக்கிற்கும், அவருடைய மனைவி ரம்ஜான் பேகத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அபூபக்கர் சித்தீக் அவருடைய மனைவி ரம்ஜான் மேகத்திடம் தகராறு செய்துள்ளார் இதில் ரம்ஜான் பேகத்தை அபூபக்கர் சித்திக் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
ஆகவே நேற்று முன்தினம் இரவு ரம்ஜான் பேகம் திடீரென்று மர்மமான முறையில் உயிரிழந்ததால், அக்கம்பக்கத்தினர் அவருடைய உயிரிழப்பின் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து வந்தனர் இதன் காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனை தொடர்ந்து, இது தொடர்பாக தகவல் அறிந்த பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி உள்ளிட்ட காவல்துறையினர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தி, உயிரிழந்த ரம்ஜான் பேகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் பெரியகுளம் காவல்துறையினர் அபூபக்கர் சித்திக்கை கைது செய்து ரம்ஜான் பேகத்தின் உயிரிழப்பு இயற்கையான மரணமா அல்லது தற்கொலையா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் ரம்ஜான் பேகத்தின் உயிர் எழுத்தில் மர்மம் நீடித்து வருவதால் உடற்கூறாய்வின் பரிசோதனை முடிவு அடிப்படையில் தான் பெரியகுளம் காவல்துறையினர் நடவடிக்கைகள் ஈடுபட இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இந்த நிலையில், உறவினர்கள் உடற் கூர் ஆய்வின் முடிவிற்காக பெரியகுளம் காவல் நிலையத்தில் முன்பு கூட்டமாக குவிந்திருக்கிறார்கள்.அத்துடன் ரம்ஜான் பேகத்தின் உயிரிழப்பு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.