fbpx

டாஸ்மாக் கடையை திடீரென முற்றுகையிட்ட பொதுமக்கள்: நொடிக்கு நொடி எகிறிய பதற்றம்..!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செண்பகத்தோப்பு சாலை அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று பிற்பகல் திடீரென்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. நேற்று திறக்கப்பட்ட புதிய கடை அருகில் மத்திய சுங்க இலாகா அலுவலகமும், மேல்நிலைப்பள்ளியும், குடியிருப்புகளும் உள்ளன. கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அம்பேத்கர் நகரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் அம்பேத்கர் நகர், பி.எஸ்.கே.மாலையாபுரம், திருவள்ளுவர் நகர், பச்சை காலனி மற்றும் தென்றல் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் டாஸ்மாக் கடை இருக்கும் பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரீத்தி, வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மரிய பாக்கியம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை அகற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் உறுதியாக கூறினர். டாஸ்மாக் கடையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நாளை அகற்றப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பின்பு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர்.

Rupa

Next Post

பிரபல பாலிவுட் இயக்குனர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. ஐசியூவில் தீவிர சிகிச்சை...

Thu Aug 25 , 2022
பாலிவுட் இயக்குனர் சவான் குமார் தக் உடல்நிலை மோசமானதை அடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. சவான் குமார் தக் ஏற்கனவே நுரையீரல் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார்.. இந்த சூழலில் உடல்நிலை மோசமானதால் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது இதயம் சீராக செயல்படவில்லை என்பதால் அவருக்கு ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.. […]

You May Like