fbpx

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 2.80 கோடி திருட்டு 2 பங்குதாரர்கள் அதிரடி கைது….! திருப்பூர் அருகே பரபரப்பு….!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த சுகந்தி என்பவருக்கு கோபி பாரதி நகரில் வீடு ஒன்று இருக்கிறது. கோபியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் இந்த வீட்டை 3 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்து முன்புறமாக 15 லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டின் சாவியை பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து புதிய வீட்டில் உள்ள ஒரு அறையில் மீதி தொகையான 2.80 கோடி ரூபாயை வைத்ததாக கூறப்படுகிறது 2 நாட்களுக்கு முன்னால் புதிய வீட்டுக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் இந்த திருட்டு நடைபெற்ற அன்றைய தினம் அதிகாலை 3 மணி அளவில் ஒரு வெள்ளை நிற கார் புறப்பட்டு சென்றது பதிவாகி இருந்தது. காவல்துறையினர் விசாரணை நடத்தி இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்ததாவது சுதர்சன் பங்குதாரர்களாக செயல்பட்டு வந்த ஸ்ரீதர் மற்றும் பிரவீன் உள்ளிட்டோர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. ஆகவே அவர்களுடைய காரில் இருந்து பணம் மீட்டப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

Next Post

“ அரசியல்வாதியை போல பேசுகிறார்..” தமிழக ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் தனித்தீர்மானம்..

Mon Apr 10 , 2023
தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.. 144 பேர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.. 2 எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தனர்.. இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ ஆளுநர் அரசியல் சட்டத்தை கடந்து, அரசியல் கட்சியின் கண்ணோட்டத்தில் செயல்படுவதால் இப்படி ஒரு தீர்மானத்தை 2வது முறையாக முன்மொழிய வேண்டிய நிர்பந்தத்தை ஆளுநர் ஏற்படுத்தி உள்ளார்.. ஆட்டுக்கு தாடியும், நாட்டிற்கு ஆளுநர் […]
டெல்லி விரைகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!! தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு..!!

You May Like