fbpx

மீண்டும் மீண்டுமா….? ராமஜெயம் கொலை வழக்கில் சிபிசிஐடி எடுத்த அதிரடி முடிவு….!

தற்சமயம் தமிழக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கும் கே என் நேருவின் சகோதரரும், பிரபல தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012 ஆம் வருடம் மார்ச் மாதம் 29ஆம் தேதி திருவளர் சோலை அருகே கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்த வழக்கை திருச்சி மாவட்ட காவல் துறையினர் விசாரித்து வந்தனர். ஆனால் இந்த வழக்கு அதன் பிறகு சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது.

அதன் பின்னர் மீண்டும் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது இந்த சம்பவம் நடைபெற்று சுமார் 11 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் தற்போது வரையில் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆகவே இந்த வழக்கை விசாரிக்க சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு குழு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் இந்த வழக்கத்திற்கு எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டார் இதன் பிறகு மறுபடியும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையில் கொலை நடைபெற்ற அந்த காலகட்டத்தில், அந்தப் பகுதியை சுற்றி இருக்கக்கூடிய செல்போன் டவர்களில் ஆக்டிவாக இருந்த சந்தேகத்திற்கிடமான செல்போன் நபர்களை வைத்து 12 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் தங்களுடைய பட்டியலில் வைத்திருக்கிறார்கள்.

இதனையடுத்து அந்த நபர்கள் அனைவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதனை அடிப்படையாகக் கொண்டு சந்தேகப்பட்டியில் இருக்கின்ற திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி, கணேஷ், தினேஷ், சத்யராஜ், செந்தில், கணைவாணன், திலீப், சுரேந்தர் உள்ளிட்டோரிடம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் அறிவியல் கூடத்தில் சென்ற 18ஆம் தேதி மற்றும் 19 உள்ளிட்ட தேதிகளில் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விசாரணையின் 3வது நாளான நேற்றைய தினம் திருச்சியை சார்ந்த சாமி ரவி சிவா அப்போது கொலை குறித்து கேள்விகள் மற்றும் பொதுவான கேள்விகள் என்று மாறி, மாறி கேள்விகள் கேட்கப்பட்டு அவர்கள் வழங்கும் பதிலின்போது அவர்களுடைய நாடித்துடிப்பு உள்ளிட்டவை வரைபடத்தில் குறிக்கப்பட்டு அவை தடயவியல் நிபுணர்களால் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இப்படி நடத்தப்பட்ட சோதனையில் சிவா மற்றும் ராஜ்குமார் உள்ளிட்ட இருவரிடமும் மேலும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டி உள்ளதாக தடயவியல் அலுவலர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆகவே சிவா மற்றும் ராஜ்குமார் உள்ளிட்ட இருவரும் இன்று காலையில் மறுபடியும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

இதனை அடுத்து சுமார் பத்து தினங்களுக்கு பின்னர் உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை தொடர்புடைய நீதிமன்றம் மற்றும் விசாரணை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

இதற்கு நடுவே திருச்சி ராமஜெயம் கொலை குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி காவல்துறையினர் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

அண்ணாமலையை தனித்தனியே சந்தித்த இபிஎஸ், ஓபிஎஸ்.. பாஜக ஆதரவு யாருக்கு..?

Sat Jan 21 , 2023
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளது.. ஆனால் அதே நேரத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவும் நிலையில், இடைத்தேர்தலில் யார் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓபிஎஸ் தரப்பிலும் தனித்தனியாக […]

You May Like