fbpx

தூங்கிக் கொண்டிருந்த 6 பேரை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற பெண்…..! காரணம் என்ன…..?

ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி அவனுடைய கோபம் தான். கோபம் இல்லாமல் நிதானமாக யோசிப்பதற்கு முயற்சி செய்தால், நிச்சயமாக மன அழுத்தத்தை தவிர்க்கலாம்.ஆனால் இந்த மன அழுத்தம் வந்துவிட்டால் நிச்சயமாக நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதில் எந்தவிதமாற்று கருத்தும் இல்லை.

அந்த வகையில், காரைக்கால் மாவட்டம் அக்கரை வட்டம் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் இவருடைய மனைவியின் துற்கா லட்சுமி( 35) இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகின்றனர் இதற்கு நடுவே கர்ப்பமாக இருந்த துர்கா லட்சுமி பிரசவத்துக்காக நெடுங்காடு அருகே உள்ள நல்லாத்தூர் மேல படுகை பகுதியில் இருக்கின்ற தாய் வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தார். அங்கே அவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இந்த சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் துர்கா லட்சுமி உள்ளிட்ட குடும்பத்தினர் எல்லோரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று எழுந்த துர்கா லட்சுமி உறங்கிக் கொண்டிருந்த தன்னுடைய 3 மாத குழந்தை தன்னுடைய பாட்டி வேதவல்லி (85) தந்தை பரமசிவம்(70) தாய் தமிழரசி (65) சகோதரர்கள் ஆண்டவர்( 45) நடராஜன் (40) உள்ளீட்டு வரை மண்வெட்டியால் திடீரென்று தாக்கினார். அதன் பிறகு தானும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதில் படுகாயம் அடைந்த நடராஜன் வீட்டை விட்டு வெளியே வந்து அருகில் வசிப்போரிடும் நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்தார் இதன் பின் எல்லோரையும் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரழந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு சற்று நேரத்தில் மூதாட்டி வேதவள்ளியும் உயிரிழந்தார். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த நெடுங்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, கத்தி போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துர்கா லெட்சுமி மன உளைச்சலின் காரணமாக, இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

குடிகார கணவனை வெந்நீர் ஊற்றி கொலை செய்த மனைவி…..! அதிர்ந்து போன நீதிமன்றம்….!

Fri Jan 27 , 2023
நாட்டில் இந்த குடிப்பழக்கம் பலரை பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு போய் நிறுத்தி விடுகிறது, அதோடு, இந்த குடிப்பழக்கத்தால் பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இந்த குடிப்பழக்கத்தால் தமிழகத்தில் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். அதேபோல பல்வேறு தாய்மார்கள் இந்த குடி பழக்கத்தால் இன்னமும் கதறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள இடையந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (44) கூலித் […]

You May Like