fbpx

தொடர் கனமழை உயரும் அணையின் நீர்மட்டம்…..! தேனி விவசாயிகள் மகிழ்ச்சி….!

தேனி மாவட்டம் பகுதிகளில் ஒரு சில தினங்களாக கோடை மழை வெகுவாக பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்த மாவட்டத்தில் செய்து வரும் மழையால் நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதோடு, அந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பொழிவு இருந்து கொண்டே இருக்கிறது.

அந்த மாவட்டத்தில் இருக்கின்ற வைகை அணை, சண்முக நதி அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை மற்றும் முல்லை பெரியாறு அணை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

அதாவது, 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 52.99 அடியாக இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து 284 கன அடியாக இருக்கிறது. 72 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேபோன்று மஞ்சளாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் 41.30 கன அடியாக இருக்கிறது. அந்த அணையின் முழுமையான கொள்ளளவு 57 அடி என்று சொல்லப்படுகிறது. நீர் வரத்து 31 கனஅடியாக இருக்கிறது. அதேபோல நீர் வெளியேற்றம் என்பது இல்லை.

மேலும் 126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 47.97 அடியாக இருக்கிறது. அணைக்கு நீர் வரத்து என்பது 7.16 கன அடி என்று சொல்லப்படுகிறது. 3 கன அடி தண்ணீர் நாள்தோறும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

52.55 அடி உயரம் கொண்ட சண்முக நதி அணையின் நீர்மட்டம் 27.40 கன அடியாக இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து 04 கன அடி என்று கூறப்படுகிறது. அதே போல இந்த அணையில் இருந்தும் நீர் வெளியேற்றப்படவில்லை.

மேலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.89 அடியாக இருக்கிறது. அதேபோல அணைக்கு நீர்வரத்து 413 கன அடி என்று கூறப்படுகிறது. மேலும் 100 கன அடி தண்ணீர் நாள்தோறும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Next Post

BreakingNews:வெளியானது சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்…..! எப்படி தெரிந்து கொள்ளலாம்…..?

Fri May 12 , 2023
கடந்த 8ம் தேதி தமிழக முழுவதும் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது .இதில் 94.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த நிலையில், இன்று சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளை https://results.cbse.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். சிபிஎஸ்இ வாரியத்தின் cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களின் மூலமாகவும் சிரமமின்றி மாணவர்கள் இந்த தேர்வு […]

You May Like