சென்னை மாம்பலத்தில் வசித்து வருபவர் கணேஷ் பாபு நேற்று இரவு இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். இதனை அறிந்த கணேஷ்பாபு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னை, எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் குடிபோதையில் 2 நபர்கள் படுத்து உறங்கிக் கொண்டு இருந்துள்ளனர் என தெரியவந்துள்ளது இதன் பேரில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர்கள் இருவரும் சரியான தகவல் அளிக்காததன் பேரில், அவர்கள் மேல் சந்தேகப்பட்ட போலீசார், அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்துள்ளனர். அந்தப் பையில் 7 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்துள்ளது. அதனால் அவர்களின் மேல் சந்தேகம் கொண்ட ரயில்வே அதிகாரிகள் அவர்களிடம் விசாரணையை தீவிர படுத்தியதில் அவர்கள் அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டையைச் சேர்ந்த பெயிண்டர் சையது அப்துல் ஹக்கீம் ( 37) மற்றொரு நபர் ஆட்டோ ஓட்டுனர் என்றும், பாடியைச் சேர்ந்த குமார் (29) என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் இருவரையும் மாம்பலம் காவல்துறையிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை செய்த மாம்பலம் போலீசார் அவர்கள் ஏற்கனவே திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற ஈடுப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீலாங்கரை, அம்பத்தூர், பட்டாபிராம், ஆவடி கொரட்டூர், நவம்பூர் போன்ற பகுதிகளில் வழக்குகள் அவர்களின் மீது இருப்பதாக தெரிவித்துள்ளனர்.