எதிர்வரும் 2024 ஆம் வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக தற்போதே தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. 3வது முறையாக மோடி பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்து வருகிறார்.
அதேபோல திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளை தொடங்கி விட்டனர். அதிலும் காங்கிரஸ் கட்சி தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை வைத்து தன்னுடைய தேர்தல் வேலையை செய்து வருகிறது என்பது எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
அந்த விதத்தில் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கழக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி யாருடைய மிரட்டலுக்கும் திமுக பயம் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களான நீங்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றி விட்டீர்கள், தற்போது நான் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும். அதே சமயத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதால் அவருடைய பதவியை பாரதிய ஜனதா பதித்தது அதேபோல திமுகவையும் மிரட்டலாம் என்று நினைத்தால் அது நடக்காது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.