fbpx

சென்னை அருகே முன்விரோதம் காரணமாக ரவுடியை கொல்ல முயற்சி….! நூலிழையில் தப்பிய அதிர்ஷ்டம்…..!

சென்னை மதுரவாயில் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தீனா என்கின்ற தீனதயாளன்( 22). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கின்றன. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் தான் இவர் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் விருகம்பாக்கம் ஏரிக்கரை சாலையில் இருக்கின்ற பஞ்சர் கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தீனதயாளனை நோக்கி நாட்டு வெடிகுண்டை வீசி உள்ளனர். அது குறி தவறி பஞ்சர் கடையின் மீது விழுந்து வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சர் கடை முழுமையாக சேதம் அடைந்தது.

இதனைத் தொடர்ந்து தீன தயாளன் அங்கு இருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அவரை 2 பேர் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்க முற்பட்டனர். அங்கு தயாராக நின்றிருந்த மேலும் சிலரும் தீனதயாளனை தாக்க ஓடிவந்தனர். அதற்குள் வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்துவதற்காக வந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்தனர்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அந்த கும்பல், தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது தீனா தயாளன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். தகவல் அறிந்து விருகம்பாக்கம் காவல் நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அவர்கள் வெடிகுண்டு சிதறவர்களை கைப்பற்றி ஆய்வு நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனிப்படை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

இதில் தீனதயாளனை கொலை செய்ய முயற்சி செய்தது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சேட்டு என்கின்ற விக்கி மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. இது குறித்து சேட்டு, அவருடைய நண்பர்கள் அருண், ஈஸ்வரன், சின்னத்தம்பி, சஞ்சய் என்கின்ற கொரில்லா வந்துட்டா 5 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது முன் விரோதம் இருந்திருக்கிறது. நேற்று முன்தினம் தீனதயாளன் மது போதையில் சேட்டுவை அவரது பிறந்தநாள் விழாவில் வைத்து தாக்கி இருக்கிறார். இதனால் ஆத்திரம் கொண்ட அவர், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தீனதயாளனை தீர்த்துக்கட்ட முயற்சி செய்திருக்கிறார் என்று கூறினர்.

Next Post

சென்னை அருகே…..! வலி நிவாரண மாத்திரையை போதைப் பொருளாக விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 6 பேர் அதிரடி கைது….!

Thu May 18 , 2023
போதைப் பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கலை தடுப்பதற்காக தலைநகர் சென்னையில் போதை தடுப்புக்கான நடவடிக்கை என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால். அதன் அடிப்படையில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறை ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் காலை சூளைமேடு, எம்ஜிஆர் நகர் போன்ற […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like