தமிழகத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். ஆனாலும் இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று சொன்னாலும் கூட மத்திய, மாநில அரசுகளால் இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இரவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட முயற்சிகள் நடைபெற்றாலும் கூட ஒருவகையில் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பட்டப்பகலில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது உண்மையிலேயே தமிழ்நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழசெய்கிறது.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இங்கே வழக்கம் போல இன்று காலை 10 மணி முதல் வங்கி செயல்பட ஆரம்பமானது.இந்த நிலையில் தான் அந்த வங்கிக்கு வந்த ஒரு இளைஞர் திடீரென்று தன்னுடைய கையில் வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை வங்கி ஊழியர் மீது அடித்து கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட வங்கி ஊழியர்கள் அந்த இளைஞரை பிடிக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். இதற்கு நடுவே இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்திருக்கிறார்கள் அதன்பிறகு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் திண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்த கலீல் ரகுமான் (23) என்ற விவரம் தெரிய வந்திருக்கிறது.