திருவனந்தபுரம் அருகில் இருக்கும் சிறையின்கீழ் பகுதியில் வசித்து வருபவர் வினீத் (25). இவர் ஒரு டிக்டாக் பிரபலம். இவர் டிக் டாக்கில் எந்த வீடியோ வெளியிட்டாலும் ஒரு சில நிமிடங்களில் அந்த வீடியோ வைரலாகிவிடும். எனவே இவருக்கு சமூக வலைதளங்களில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கின்றனர்.
வினீதுக்கு கொல்லத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளனர். எனவே வீடியோ கால் மூலம் இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அப்போது மாணவிக்கு தெரியாமல் வினீத் அந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் டிக் டாக்கில் எப்படி பிரபலமடைவது என்று சொல்லித் தருகிறேன் என்று மாணவியிடம், வினீத் கூறி உள்ளார். வினீத் கூறியதை நம்பிய கல்லூரி மாணவி, வினீத் அழைத்ததால் திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு லாட்ஜுக்கு சென்று இருக்கிறார். அப்போது வினீத், மாணவியின் ஆபாச புகைப்படங்களை காண்பித்து, மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து இருக்கிறார்.
பின்னர், இது குறித்து அந்த மாணவி திருவனந்தபுரம் தம்பானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பிறகு வினீத்தை கைது செய்து அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். பிறகு அந்த செல்போனை சோதனை செய்து பார்த்தபோது, செல்போனில் அந்த மாணவியின் ஆபாச புகைப்படங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் பல இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் இருந்துள்ளது. இது தவிர சில பேருடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களும் அதில் இருந்தன. ஏற்கனவே இது போல பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.