இந்த பகைக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது, அதாவது இந்த பகை எப்போது யாருக்கு இடையில் வரும் என்பது தெரியாது.அப்படி இந்த பகை வந்துவிட்டால் அது நம்மை வேறொரு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்று விடும்.
ஆகவே நம்முடைய கோபத்தையும், மனதில் தோன்றும் எண்ணங்களையும், கட்டுப்படுத்தும் ஆற்றல் நமக்கு நிச்சயம் இருக்க வேண்டும் அப்படி ஒரு ஆற்றல் நமக்கு இருந்து விட்டால் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் நம்மால் சமாளித்து விட முடியும்.
திருப்பூர் பழைய பேருந்து நிலைய பகுதியில் இருக்கின்ற ஒரு தங்கும் விடுதியின் அறையில் இருந்து சென்ற 7ம் தேதி ஒரு துர்நாற்றம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அந்த விடுதியில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் அந்த அறையை திறந்து பார்த்தபோது உள்ளே ஒரு இளைஞர் சடலமாக கிடந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கழுத்தில் குத்தப்பட்ட நிலையில், அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் காவல்துறையினரின் விசாரணையில், திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் புளியந்தோட்டத்தை சேர்ந்த வினோத்குமார் (26) என்ற நபர் தான் கொலை செய்யப்பட்ட நபர் என்றும், அவருடன் கதிரேசன் (26) என்ற கரூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரி கால நண்பர் ஒருவர் தங்கி இருந்ததும் தெரியவந்தது.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இருவருக்குமிடையே தவறான உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் திருப்பூர் தங்கும் விடுதியில் கடந்த 4ம் தேதி தங்கிருந்த போதுதான் இவர்களுக்குள் தகராறு எழுந்திருக்கிறது. இதனை தொடர்ந்து வினோத்குமாரை கொலை செய்துவிட்டு கதிரேசன் கரூருக்கு சென்று விட்டார். அங்கு காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து கடந்த ஏழாம் தேதி அவர் தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.