fbpx

தமிழக மக்களே இதற்கு இன்றே கடைசி நாள்…..! உடனே முந்துங்கள்…..!

வீடு விசைத்தறி கைத்தறி குடிசை மற்றும் விவசாய நகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் சென்ற வருடம் அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த பணிகள் நவம்பர் மாதத்தில் ஆரம்பித்த நிலையில், டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் மின் இணைப்பு என்னையும் ஆதார் கார்டு எண்ணையும் பலர் இணைக்காத நிலையில் கால அவகாசம் ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரையிலும் அதன் பிறகு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

லட்சக்கணக்கான மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் நேரிலும் இணையம் மூலமாகவும் ஆதார் எண்ணை மேன்மைப்பு என்னுடன் இணைத்தனர். இந்த சூழ்நிலையில் இனியும் இதற்கு கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்காத நபர்கள் இன்று மாலைக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதோடு ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்தவர்கள் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.இதற்கு நடுவே மின்வாரிய இணையதளத்தில் தங்களுடைய மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை வழங்கி மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டார்களா என்பதை நுகர்வோர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

Next Post

கவனம்... உங்கள் வங்கி விவரங்கள் திருடப்படலாம்.. கூகுள் குரோம் பயனர்களுக்கு அரசு எச்சரிக்கை...

Wed Feb 15 , 2023
கூகுள் குரோம் (Google Chrome) உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசராகும். கூகுள் குரோம் பிரவுசரை தினமும் மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.. பெரும்பாலான விஷயங்களை ஆன்லைனிலேயே செய்வதால், சில நேரங்களில் இணையத்தில் நமது முக்கியமான தகவலை வழங்க வேண்டியிருக்கும், மேலும் பிரவுசரில் போதுமான பாதுகாப்பு இல்லை என்றால், உங்கள் விவரங்களை ஹேக்கர்கள் திருடக்கூடும்… இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க, Google Chrome தனது பிரவுசருக்கான புதுப்பிப்புகளை அவ்வப்போது […]

You May Like