திருச்சி அருகே புத்தூர் ஈ.வி.ஆர் சாலையில் இருக்கின்ற ஒரு அழகு நிலையத்தில் விபச்சாரம் நடத்தப்படுவதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அதனை சோதனையில் ஈடுபட்டனர் அதில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மேலும் கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ராஜ்பாபு (27) மற்றும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் அஜித்குமார் (27) உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருச்சி நீதிமன்றத்தில் அவர்கள் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். எத்தனை தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த 2 பெண்களும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.