fbpx

வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம் காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….! திருச்சி அருகே பயங்கரம்….!

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் ஓட்டுநராக வேலை பார்த்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், உடல் நல குறைவு காரணமாக, இவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார். ஆகவே கருப்பன் மனைவி ராஜேஸ்வரி( 65).

இந்த நிலையில், ராஜேஸ்வரி, கருப்பண்ணன் தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றன. மகன் மணிகண்டன் நாமக்கல் அருகே இருக்கின்ற வளையபட்டியில் மெடிக்கல் கடை ஒன்றை நடத்தி வருவதோடு, குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார் மகள் பிரியா திருமணம் முடிந்த நிலையில், திண்டுக்கல்லில் கணவருடன் வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மூதாட்டி ராஜேஸ்வரி தொட்டியம் ஐயப்பன் நகரில் இருக்கின்ற தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேஸ்வரியை சிலர் பார்த்திருக்கிறார்கள். அதன்பிறகு நேற்று அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி இருக்கிறது.

இதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தின்ர் தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது ராஜேஸ்வரி கை கால்கள் வாய் உள்ளிட்டவைத்துண்டால் கட்டப்பட்ட நிலையில், உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

அத்தோடு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. அதோடு பீரோ திறக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தது. இதனை தொடர்ந்து, முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், தொட்டியம் காவல்துறை ஆய்வாளர் முத்தையா உள்ளிட்டோர் ராஜேஸ்வரியின் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் துறை நிபுணர்கள் குழு வந்து, தடயங்களை சேகரித்திருக்கின்றன. காவல்துறை மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் வளையபட்டியில் இருந்து அந்த மூதாட்டியின் மகன் மணிகண்டன் வந்த பிறகுதான் வீட்டிலிருந்த பணம் பொருட்கள் உள்ளிட்டவை திருடு போனதின் மதிப்பு எவ்வளவு? என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.

Next Post

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயற்சி செய்தபோது ஏற்பட்ட விபரீதம்….! ராணிப்பேட்டை அருகே பரிதாபம்….!

Thu May 18 , 2023
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்முருகன். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொழிலாளர்களை அழைத்ததாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தை அடுத்துள்ள சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (40) அதேபோல ராணிப்பேட்டையையடுத்துள்ள புலியூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (40), வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (25), வாலாஜாபேட்டை அடுத்துள்ள வீ.சி […]

You May Like