சென்னை தாம்பரம் அருகே இளைஞர்கள் இரண்டு பேரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த விவகாரத்தில் நான்கு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். மணிமங்கலம் காவல்நிலையம் அருகே நேற்றிரவு சுரேந்தர், விக்னேஷ் ஆகியோரை மர்மகும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
தகவல் அறிந்த மணிமங்கலம் காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட இருவரும் கடந்த மார்ச் மாதம், இதே மணிமங்கலத்தை சேர்ந்த ரவுடி தேவேந்திரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைக்கு சென்றவர்கள் என தெரிய வந்ததுள்ளது.
இதை தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக மணிமங்கலம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன், புஷ்பராஜ், லோகேஸ்வரன், தில்லிபாபு ஆகிய நான்கு பேரும் இன்று காலை தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்து உள்ளனர். தனிப்படை காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேவேந்திரன் கொலைக்கு பழி வாங்கியது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து நான்கு பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.