fbpx

சேலம் அருகே காசு வெல்டிங் மூலமாக ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற இருவர் அதிரடி கைது…..! உதவி செய்தவரை பாராட்டிய போலீஸ்…..!

சேலம் அருகே கடையம்பட்டி ஜோடுகுளி என்ற பகுதியில் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி செல்வம்( 63) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 2 ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் ஒரு ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளை அடிக்க 3 பேர் முயற்சி செய்திருக்கிறார்கள்.

அப்போது ஒருவர் வெளியே பாதுகாப்புக்காக நின்றார் மற்ற இருவரும் காஸ் சிலிண்டரை வைத்து கேஸ் வெல்டிங் மூலமாக இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்தனர் அப்போது சத்தம் கேட்டு கட்டிட உரிமையாளர் செல்வம் வெளியே வந்து பார்த்துள்ளார். உடனே ஏடிஎம் மையத்தின் வெளியே நின்றவர் அங்கிருந்து தப்பி சென்றார். ஏடிஎம் மையத்துக்குள் 2 பேர் இருப்பதை பார்த்த செல்வம் ஷட்டரை பூட்டி விட்டார்.

உடனடியாக இது தொடர்பாக தீவட்டிபட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பெயரில் காவல்துறையினர் விரைந்து வந்து ஷட்டரை திறந்து உள்ளே இருந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த ரைஸல்கான் (20) உத்தர பிரதேசத்தை சார்ந்த 17 வயதான நபர் உள்ளிட்டோர்தான் ஏடிஎம் மையத்தில் இருந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தப்பி சென்றவரை தீவிரமாக தேடி வருகின்றன. ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்துக் கொடுத்த கட்டிட உரிமையாளர் செல்வத்தை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர்.

Next Post

மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 1261 பணியிடங்கள்….! விண்ணப்பம் செய்ய நாளையே கடைசி தேதி உடனே முந்துங்கள்….!

Mon May 8 , 2023
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கு UPSC CMS 2023 அறிவிப்பின் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள்-1261கல்வி தகுதி-MBBS தேர்ச்சிதேர்வு நடைபெறும் நாள்-ஜூலை 16விண்ணப்பம் செய்ய கடைசி நாள்- மே 9 மேற்கொண்டு இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பம் செய்ய upsc.gov.in என்ற இணையதள முகவரியை […]

You May Like