fbpx

அடங்காத பாலியல் வெறி.. ஆத்திரத்தில் அப்பாவி மாணவி பலியான கொடூரம்..

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பரின்கியா என்ற பகுதியில் தயானதீசட்னா என்பவர் வசித்து வருகிறார். அவரது மனைவியிடம் பள்ளி மாணவி ஒருவர் டியூசன் படித்து வந்தார். டியூசன் படிக்கவந்த மாணவியிடம் தயானதிட்சனா அவரது பாலியல் ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார்.

இதனால், பயந்த மாணவி, ஒரு கட்டத்திற்கு மேல் டியூசனுக்கு வருவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் பென்சில் வாங்க அந்த மாணவி வந்துள்ளார். அப்போது தயானதீட்சனா மாணவியை தடுத்து நிறுத்தி தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை மாணவியின் மீது ஊற்றி தீ வைத்து கொலை செய்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தயானதீட்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது‌ பாலியல் வெறிக்கு, இணங்க மறுத்த அப்பாவி மாணவியை, உயிருடன் தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

’ஒரு திறனற்ற அரசின் எடுத்துக்காட்டு திமுக அரசு’..! அண்ணாமலை கடும் தாக்கு

Tue Jul 26 , 2022
கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு பட்டியலினத்தவர்கள் காரணம் என்ற முடிவுக்கு உளவுத்துறை வந்தது எப்படி? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என்பது மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தைக் கள்ள மவுனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களது இயலாமையை ஒரு சமுதாயத்தினரின் தலையில் இறக்கி வைத்துள்ளனர். தி […]

You May Like