புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தவறான தகவலை பரப்புபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியிருக்கிறார்.
ஒற்றுமையாக இருக்கின்ற நாட்டில் பிரிவினையை உண்டாக்கும் விதமாக, சிலர் தவறான கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருப்பதாக அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி வழங்கி இருக்கின்றார்.
மற்ற மாநிலங்களைச் சார்ந்தவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து வேலை பார்ப்பதை போல தமிழர்கள் பலரும் மற்ற மாநிலங்களில் பணிபுரிந்து வருவதாக தெரிவித்த அவர், பிரிவினையை உண்டாக்க நினைப்பவர்கள் மீது குண்டர் சட்டம் வாயும் என்று தெரிவித்திருக்கிறார் இந்த விவகாரம் குறித்து 2 மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த மத்திய அமைச்சர், மத்திய அரசும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கூறியிருக்கிறார்.