நாட்டில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நீதி வழங்கும் வகையில், போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் தண்டனை பெற்றால் அவருக்கு இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைக்காது.
ஆனால் இந்த சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.ஆனால் நாட்டிலேயே இந்த போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் அதிக அளவில் நிலுவையில் இருக்கும் மாநிலம் தொடர்பான தகவல் தற்போது கிடைத்திருக்கிறது .
அதாவது நாட்டிலேயே அதிக மக்கள் தொகை மற்றும் அதிக பரப்பளவு கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த 67,200 போக்சோ வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இது மற்ற மாநிலங்களை விடவும் மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளில் இது சற்றேற குறைய 28 சதவீதம் என்று கூறப்படுகிறது.
அதோடு மட்டுமல்லாமல் இதே உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகமாக நடைபெறுகிறது என்றும் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இதனை கட்டுக்குள் வைப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.