fbpx

தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த இளம் பெண்….! உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு….!

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் சீண்டல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றனர். இதனை மாநில அரசுகள் கண்காணித்து அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சொல்லப்பட்டாலும், அது உண்மை இல்லை என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள்.

அந்த அளவிற்கு நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகின்றன.அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள தரவுலா என்ற இடத்தில் கடந்த 4ம் தேதி திருமணமான ஒரு இளம் பெண் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த பக்கமாக வந்த மொஹித் ஷைனி என்ற இளைஞர் அந்தப் பெண் வயலில் தனியாக வேலை பார்த்துக் கொண்டிருந்ததை தெரிந்துகொண்டு, அந்த வாலிபர் அந்த பெண்ணின் அழகு சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

மேலும் ஆடைகளை களைந்து பாலியல் வன்கொடுமை செய்ய அந்த இளைஞர் முயற்சித்தார். இதனால் பதறிப்போன அந்தப்பெண், அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு தன்னை தற்காத்துக் கொள்வதற்காக ஒரு செயலை செய்திருக்கிறார்.

அதாவது, தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட அந்த வாலிபரின் உதட்டை ஆக்ரோஷமாக கடித்து சதையை துப்பி இருக்கிறார். அந்த இளம் பெண் இதனை சற்றும் எதிர்பாராத அந்த வாலிபர் வழியில் கதறி துடித்திருக்கிறார். அவருடைய கதறல் சட்டம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கே ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டு வாலிபரை கையும், களவுமாக பிடித்தனர். அதன் பிறகு அந்த வாலிபருக்கு அருகே இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி வழங்கப்பட்டது.

அதன் பின்னர் அந்த நபரை காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அந்த பெண் மற்றும் அவருடைய கணவர் உள்ளிட்டோர் இது குறித்து புகார் வழங்கியதன் பேரில் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த இளம் பெண்ணின் துணிச்சலான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Next Post

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு..!! இனி விடுப்பு வேண்டுமென்றால்...!! வெளியான புதிய உத்தரவு..!!

Tue Feb 7 , 2023
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவு கணினி மூலமாக தற்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து விடுப்பு வேண்டி விண்ணப்பிக்க ஏதுவாக புதிய செயலி ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு வேண்டுமென்றால் எழுத்துப்பூர்வமாக உயர் அதிகாரிகளிடம் விண்ணப்பித்து வரும் நிலையில், லீவ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த […]

You May Like