நடிகர் விக்ரம் இயக்குனர் ஹரி உள்ளிட்டோரின் கூட்டணியில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சாமி. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது.
அதன் பிறகு சற்றேற குறைய 15 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படத்தின் 2வது பாகம் அதே கூட்டணியில் உருவானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு பாபிசிம்ஹா இந்த திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் தொடர்பாக தற்போது தகவல்கள் கிடைத்திருக்கிறது. அந்த தகவலின் அடிப்படையில் சாமி 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு விக்ரம் 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார் என்று கூறப்படுகிறது.