fbpx

திண்டிவனம் அருகே இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் அதிரடி கைது….!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களை இயற்றி வந்தாலும் ,அந்த சட்டத்தினால் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட பயம் ஏற்படவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது.

அந்த வகையில் தான் திண்டுவனத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

திண்டிவனத்தில் 17 வயது பெண்ணை கூட்டு பாலியல் பார்க்க அறம் செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை எடுத்துள்ள சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளம் பெண் ஒருவர் செஞ்சி பேருந்து நிலையம் அருகே இருக்கின்ற கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்த சூழ்நிலையில்தான் அந்த கடையின் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் வீரணாமுர் பகுதியைச் சேர்ந்த சிம்பு என்ற நபர் ஆட்டோ ஓட்டுவது தொழில் செய்து வந்திருக்கிறார். இதனால் அந்த 17 வயது இளம் பெண்ணிற்கும் சிம்புவிற்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே அந்த இளம் பெண்ணை சிம்பு பலமுறை தனியாக அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதன் அடுத்த கட்டமாக, நேற்று முன்தினம் அந்த இளம் பெண்ணை சிம்பு வழக்கம் போல தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துவிட்டு அவருடைய நண்பர்களான பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களான சிவா மற்றும் செல்வம் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து இருக்கிறார்.

சிம்புவின் தகவலின் பெயரில் சிம்பு இருந்த இடத்திற்கு சிவா மற்றும் செல்வம் உள்ளிட்டோர் வருகை தந்தனர். மேலும் அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி அவர்கள் இருவரும் கூற்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பாக தகவலறிந்த உடன் ரோஷனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சிம்பு, சிவா, செல்வம் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.

17 வயதான இளம் பெண்ணை 3️ பேர் சேர்ந்து கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

அம்மாடியோவ் 2.50 கோடி மதிப்பிலான தங்கத்தை அசால்ட்டாக விமானத்தில் கடத்திய 2 பேர் அதிரடி கைது….!

Sun Jan 15 , 2023
சாதாரணமாக, கொள்ளை சம்பவம் என்பது உள்நாட்டில் நடைபெற்றாலே அதனை தடுத்து நிறுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இந்த கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே காவல்துறையில் ஒரு தனி பிரிவு இருக்கத்தான் செய்கிறது. அந்த அளவிற்கு இந்த கொள்ளை சம்பவம் மிகவும் ஆபத்தானதாகவும் இருக்கிறது. அதேநேரம் பல பரிசோதனைகளை கடந்து தான் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் விமான பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளிவர முடியும். ஆனால் அப்படிப்பட்ட விமான நிலையத்திலேயே […]

You May Like