fbpx

மீண்டும் தமிழகத்தை மிரட்டும் மழை! நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை!

ஒரு வழியாக தமிழகத்தில் மழை ஓய்ந்தது. 2022 ஆம் ஆண்டுடன் மழை தொந்தரவு முடிந்துவிடும் என்று தமிழக மக்கள் நினைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது.

அதாவது, இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் வறண்ட வானிலை இருக்கும். எனவும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் அதிகாலை சமயத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

கிழங்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, வரும் 3ம் தேதி தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. உன் மாவட்டங்களில் வறண்ட வானிலையே இருக்கும். வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரையில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸில் இருந்து, 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் முதல் 23 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

இதில் மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை எதுவும் இல்லை என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Next Post

பெண் டாக்டருக்கு தொந்தரவு கொடுத்த மெடிக்கல் ரெப்! காவல்துறையினர் அதிரடி கைது!

Mon Jan 2 , 2023
சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும் 38 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் ஒருவர் நேற்று முன்தினம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை வழங்கினார். அந்த புகார் மனுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகளான நான், மருத்துவக் கல்வி படித்து அதே பகுதியில் அழகு மற்றும் முகம் சீரமைப்பு அறுவை சிகிச்சை கிளினிக் நடத்தி வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அந்தப் புகார் மனுவில் அந்த பெண் […]
தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like