இணைய தளத்தில் தமிழ்நாடு வெதர்மேன் பனிப்பொழிவு பற்றி ஒரு அப்டேட் கூறியுள்ளார்.
அந்த பதிவில் ”அடுத்த 3-4 நாட்கள் தமிழகத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பனிப்பொழிவு இருக்கும் என்றும். இவை தென் மாவட்டங்களுக்கு பொருந்தாது” என்றும் அதில் பதிவிட்டுள்ளார். மேலும் பனிதொடர்பான செய்தியை பாடல் வரிகளாக
”பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்,
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்”
என பதிவேற்றியுள்ளார் வெதர்மேன்.
இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெதுவாக வலுவடைந்து அரபிக்கடலை நோக்கி சென்றுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழைகளும் கொட்டித் தீர்த்து வந்துள்ளது.
இதனை தொடர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதியில், வளிமண்டல சுழற்சி காரணத்தினால் , தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதிவரை மிதமான மழையே பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.