fbpx

திருமணம் ஆகி 26 நாளில் பிரிந்து சென்ற மனைவி……! தனியாக பேசுவதற்காக அழைப்பு கணவரை தாக்கிய விபரீதம் மனைவி அதிரடி கைது….!

சென்னை ஆலந்தூர் அடுத்துள்ள கீழ்கட்டளை அம்பாள் நகர் 21 வது தெருவை சேர்ந்தவர் அசோகன். இவர் மாந்திரீக தொழில் செய்து வந்தார். இவருக்கு அனுஷா என்ற ஒரு மகள் இருக்கிறார். இத்தகைய நிலையில், தான் கடந்த 2021 ஆம் வருடம் அனுஷாவுக்கும் பெங்களூருவை சேர்ந்த ஒரு நபருக்கும் திருமணம் நடந்தது.

ஆனாலும் திருமணம் ஆகி 26 நாட்கள் கடந்த நிலையில், கருத்து வேறுபாடு என்று தெரிவித்து இருவரும் பிரிந்து சென்று விட்டனர். இதன் காரணமாக, அனுஷா பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பி அங்கே தங்கி இருந்தார். அதோடு அனுஷா தான் செய்த திருமணம் செல்லாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி அனுஷாவின் கணவர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார்.

அதன் பிறகு விசாரணையை முடித்துவிட்டு வெளியே சென்றார். அப்போது அனுஷா மற்றும் அவருடைய தந்தை அசோகன் உள்ளிட்ட இருவரும் ஆஜராக வந்த அனுஷாவின் கணவரிடம் வழக்கு குறித்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்திருக்கிறார்கள்.

இந்த அழைப்பின் பேரில் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்ற கணவரிடம் பெங்களூரில் உள்ள வீட்டை என்னுடைய பெயருக்கு எழுதிக் கொடுத்து விடு. இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக சொல்ல ப்படுகிறது கணவரை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். ஆலந்தூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.


இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு அசோகன் மற்றும் அனுஷா மீது பொது இடத்தில் மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்தல், கட்டாயப்படுத்துதல் மற்றும் கொலை செய்யும் நோக்கத்தில் ஆயுதங்களை கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Next Post

பானிபூரியில உப்பு எங்கடா..? பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!! போதை ஆசாமிகள் அட்டகாசம்..!!

Tue May 2 , 2023
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர்பெருந்தொழுவில் 10 ஆண்டுகளாக பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று, திருப்பூரை சேர்ந்த அஸ்வின், பூவலிங்கம், தினேஷ்குமார் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சக்தி கணேஷ் ஆகியோர் சதீஷின் பேக்கரிக்கு மது போதையில் வந்துள்ளனர். அங்கு 4 பேரும் பானி பூரி ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர். பானிபூரியில் உப்பு இல்லை எனக்கூறி பேக்கரி உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், […]

You May Like