fbpx

பொதுமக்களே உஷார் தமிழகம் மற்றும் புதுவையில் 18 பகுதிகளில் 100 டிகிரி வெயில்…..! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை…..!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் ஆரம்பித்த நிலையில், புயல் சின்னம் காரணமாக, பரவலாக மழை பெய்து வந்தது. ஆகவே தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைவாக காணப்பட்டது.

இத்தகைய நிலையில்தான் தமிழகம், புதுவை போன்ற பகுதிகளில் நேற்று 18 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 108 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவானது.

இதனால் கிருஷ்ணகிரி நகரில் பகல் நேரத்தில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கரூர், பரமத்தி போன்ற இடங்களில் 105 டிகிரியும், பரங்கிப்பேட்டையில் 104 டிகிரியும் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

இத்தகைய நிலையில், தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அன்றாட பணிகளை செய்வதே கடுமையான சிரமமாக மாறி இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக வெயிலின் தாக்கம் கடுமையாக வாட்டி வதைக்கும் சூழ்நிலையில், வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை எனவும், அன்றாட பணிகள் எதுவும் செய்ய இயலவில்லை என்றும் சென்னை மற்றும் வேலூர் மக்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் தான் உச்சி வெயில் என்று சொல்லப்படும் 11 மணி முதல் மாலை 4:00 மணி வரையில் வெயிலில் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

Next Post

தமிழகத்தில் அதிகரிக்கும் கள்ளச்சாராய உயிரிழப்புகள்…..! காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை…..!

Tue May 16 , 2023
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உயிரிழந்துள்ள நிலையில், புதுச்சேரி கலால் துறையின் வட்டாட்சியர், கலால் துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த தனிப்படை குழுவினர் பல பகுதிகளில் தங்களுடைய ஆய்வை ஆரம்பித்திருக்கிறார்கள். இது தொடர்பாக கலால் துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவிக்கும்போது புதுவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த தனிப்படை இதுவரையில் 66.33 லட்சம் மதிப்பிலான 433 பெட்டிகளில், மதுபானங்களை கைப்பற்றி இருக்கிறது. […]

You May Like