fbpx

அரசாங்க பணத்துடன் காதலர்களுடன் ஓட்டம் பிடித்த மனைவிகள்….! அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்….!

முன்பெல்லாம் சில மனைவிகள் கணவன்களை ஏமாற்றிவிட்டு தங்களுடைய காதலனுடன் ஓட்டம் பிடிப்பது வழக்கமாக இருந்து வந்தது.அப்படி காதலர்களுடன் ஓட்டம் பிடிக்கும் மனைவிமார்களை கண்டுபிடிப்பதற்காக கணவன்மார்கள் காவல்துறையை நாடுவது வழக்கமாக இருந்து வந்தது.

ஆனால் கணவன்மார்களை ஏமாற்றிவிட்டு காதலன்களுடன் சென்று கொண்டு இருந்த மனைவிமார்கள் தற்போது ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் ஏமாற்றிவிட்டு தங்களுடைய காதலர்களுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இதனைக் கேட்கும் பலருக்கும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். சிலருக்கு நகைப்பாகவும் இருக்கலாம் சிலருக்கு நம்ப முடியாத விஷயமாகவும் இருக்கலாம் ஆனால் இதுதான் உண்மை.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட ம் நகர்புற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டம். கடந்த 2015 ஆம் வருடம் ஜூன் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பொருளாதார நிலையில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் குறைந்த, நடுத்தர வருமான பிரிவை சார்ந்தவர்கள் இந்த திட்டத்தின் கீழ் அரசு பயனாளிகளின் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுகிறது, இதன் மூலமாக அவர்கள் சொந்தமாக வீடு கட்டிக் கொள்ள முடியும்.

குடும்பத்தின் பெண் தலைவி வீட்டின் உரிமையாளராகவோ, அல்லது இணை உரிமையாளராகவோ இருப்பதை இன்று திட்டம் கட்டாயமாக்கி இருக்கின்றது. இந்த நிலையில் தான் இந்த திட்டத்தின் பயனாளிகளான 4 பெண்களும் இந்த ஒதுக்கீட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவர்களுடைய வங்கி கணக்கில் 50,000 ரூபாய் மானியம் வரவு வைக்கப்பட்டவுடன் அவர்கள் தங்களுடைய கணவர்களை விட்டு பிரிந்து சென்றுள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் பணத்தை பெற்ற பலர் வீடு கட்டாமல் இருந்து வந்தனர். அப்படி வீடு கட்டாதவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உடனடியாக வீடு கட்டுமாறு கேட்டுக் கொண்டது. சிலர் தங்களுடைய மனைவி பெயரில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். அப்படி விண்ணப்பம் செய்திருந்தவர்களுக்கு தற்போது என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

பெல்ஹாரா பாங்கி ஜைத்ப்பூர் மற்றும் சித்தார் உள்ளிட்ட 4️ பெண் பயனாளிகளின் கணக்குகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் முதல் தவணை அனுப்பப்பட்டது. இவர்களுடைய வீடுகள் கட்டும் பணி ஆரம்பிக்கப்படாத நிலையில், இப்படி ஒரு வினோத சம்பவம் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்திருக்கிறது. இதன் பின்னர் தான் இந்த செய்தி பத்திரிகைகளுக்கு தெரிந்தது.

பெண்களின் கணவன்மார்கள் கடைசியாக அரசு அலுவலகத்தை அணுகி அதிகாரிகளிடம் தங்களுடைய மனைவிகள் அவர்களுடைய காதலர்களுடன் வீட்டை விட்டு சென்று விட்டதாகவும், இந்த திட்டத்தின் கீழ் 2வது தவணை தனத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர். இந்த பயனாளிகளிடம் பணத்தை எப்படி திரும்ப பெறுவது என்று தெரியாமல் மாவட்ட அதிகாரிகள் திகைத்து வருகின்றனர் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.j

Next Post

TNPSC வேலைவாய்ப்பு... 90-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்...! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்...!

Thu Feb 9 , 2023
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer பணிக்கென மொத்தம் 93 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு கல்வி தகுதி B.Sc Agriculture, M.Sc., அல்லது B.Sc., Horticulture முடித்திருக்க வேண்டும். . பணிக்கு ரூ.37,700 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வின் அடிப்படையில் பணி வழங்கப்படும். […]

You May Like