அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முறை தவறிய உறவில் இருந்தால் அந்த முறை தவறிய உறவால் என்றாவது ஒருநாள் நாம் நிச்சயமாக துன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும்.
ஆனால் அப்படி எந்த ஒரு தவறான உறவிலும் இல்லாதவர்கள் மற்றும் நம்மை சார்ந்தவர்கள் அடுத்தவர்கள் செய்யும் இது போன்ற தவறினால் மனமுடைந்து உயிரிழக்கும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் ராமகிருஷ்ணன், இவருடைய மனைவி சஞ்சீவி இந்த தம்பதியினருக்கு 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தற்சமயம் இந்த தம்பதிக்கு வர்ஷா, வர்ஷிகா இன்று இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. ஆகவே கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த சஞ்சீவி வீட்டில் யாரும் இல்லாத சமயமாக பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வட பொன்பரப்பி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சஞ்சீவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் இந்த தற்கொலை குறித்து சஞ்சீவியின் தந்தை தர்மலிங்கம் தெரிவிக்கும்போது, தன்னுடைய மருமகன் ராமகிருஷ்ணன் அவ்வப்போது, தன்னுடைய மகளை சந்தேகப்பட்டு துன்புறுத்தி வந்தார் எனவும், என்னுடைய மகளை தற்கொலைக்கு அவர் தான் தூண்டினார் எனவும், தான் தன்னுடைய மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார்.
அதோடு மட்டுமல்லாமல் ராமகிருஷ்ணனுக்கு பல பெண்களுடன் முறை தவறிய உறவு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே ராமகிருஷ்ணன், அவருடைய தந்தை ராமசாமி மற்றும் தாய் ஜெயக்கொடி உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய வரி அவர் வட பொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
இந்த புகாரினை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணம் நடந்து 3 ஆண்டுகளில் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக, இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
அந்த பெண்ணின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை தான் காரணமா? அல்லது அவருடைய கணவர் வீட்டார் தற்கொலைக்கு காரணமாக இருந்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.