மனைவி என்னதான் ஒருவரை நன்றாக பார்த்துக் கொண்டாலும், அவருக்கு என்ன தேவை என்று அவர் சொல்லாமலே அறிந்து நடந்து கொண்டாலும், மனைவியை விடுத்து வேறொரு பெண்ணிடம் தன்னுடைய இச்சையை தீர்த்துக் கொள்ள நினைக்கும் ஆண்கள் தற்போதைய சமுதாயத்தில் அதிகம் இருக்கிறார்கள்.
அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள தகரக்குப்பம் ஒட்டனேரி கிராமத்தை சேர்ந்தவர் கௌதமி(32). இவருடைய தங்கை பிரியா அக்கா,தங்கை இருவருக்குமே திருமணம் நடந்து விட்டது. இதில் கௌதமியின் கணவர் முனுசாமி சில வருடங்களுக்கு முன்னர் இயற்கை எய்திவிட்டார். கௌதமி, முனுசாமி தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கணவன் உயிரிழந்த நிலையில், குடும்ப வறுமையின் காரணமாக, கௌதமி ராணிப்பேட்டையில் இருக்கின்ற ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்திருக்கிறார்.
பிரியாவின் கணவர் சஞ்சீவிராயன்(35). இவர் ஒரு கூலி தொழிலாளி சஞ்சீவி ராயன் தன்னுடைய மனைவியின் சகோதரியான கௌதமியை தனிமையிலிருக்கும்போது எப்படியாவது அடைந்து விடலாம் என்று திட்டம் தீட்டினார். ஆகவே அவ்வப்போது கெளதம் வீட்டிற்கு சென்று தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு சஞ்சீவிராயன் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே ஆத்திரம் கொண்ட கௌதமி, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இதனை தொடர்ந்து சஞ்சீவி ராயனை காவல்துறையினர் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
கௌதமி தன் மீது காவல் நிலையத்தில் புகாரலித்துவிட்டாரே என்ற ஆத்திரத்தில் இருந்த பிரியாவின் கணவர் சஞ்சீவிராயன், கௌதமி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்த சமயத்தில் அவரை வழிமறித்து மிகவும் ஆபாசமாக பேசி, இரும்பு கம்பி மற்றும் கருங்கல் உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கௌதமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அருகில் வருவதற்குள் சஞ்சீவிராயன் தப்பி சென்று விட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கின்ற சஞ்சீவிராயனை தீவிரமாக தேடி வருகின்றனர்