சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல், இவருடைய மகள் பிரபாவதி( 20) இவர் சீர்காழியில் இருக்கின்ற ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் பயிற்சி வகுப்பு படித்து வந்தார். இத்தகைய நிலையில் பிரபாவதி நேற்று அதிகாலை தன்னுடைய வீட்டின் பின் புறத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக இது தொடர்பாக திருவெண்காடு காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது இந்த தகவலை தொடர்ந்து திருவெண்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உரைந்தனர் அதோடு உயிரிழந்து கிடந்த பிரபாவதி என் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதோடு உயிரிழந்த பிரபாவதி வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் பிரபாவதி தெரிவித்திருந்ததாவது, தான் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (26) என்பவரை காதலித்து வந்ததாக கூறியுள்ளார். அத்துடன் தற்சமயம் தான் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆகவே இது தொடர்பாக ஆனந்தராஜ் மற்றும் அவருடைய சகோதரர்கள் அர்ஜுனன் அலெக்சாண்டர் அதோடு ஆனந்தராஜின் அண்ணி ரஞ்சனி உள்ளிட்டோரிடம் முறையிட்ட போது அவர்கள் திருமணம் செய்து வைக்க முடியாது என்று மிரட்டியதாகவும், நீ செத்துப் போய்விடு என்று தெரிவித்ததாகவும் அந்த கடிதத்தில் அவர் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் திருவெண்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அலெக்ஸாண்டர், ஆனந்தராஜ், ரஞ்சனி உள்ளிட்ட மூவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அதனுடைய இந்த வழக்கில் தொடர்புடைய ஆனந்தராஜின் மற்றொரு அண்ணனான அர்ஜுனனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன.