கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வினோத் (38) இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த சசிகலா என்ற பெண்ணை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும் சசிகலாவுக்கு அவருடைய உறவுக்கார நபர் ஒருவரை திருமணம் செய்து வைக்க சசிகலாவின் பெற்றோர் முயற்சித்தனர் ஆகவே காதலன் வினோத்திடம் பேசுவதை சசிகலா தவிர்த்து வந்ததாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக கோபமடைந்த வினோத் சசிகலாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கடந்த 2013ம் வருடம் அக்டோபர் மாதம் 24ம் தேதி வினோத் சசிகலாவிடம் தனியாக பேச வேண்டும் என்று தெரிவித்து அழைத்துள்ளார். இதனை நம்பி சசிகலாவும் அவர் கூப்பிட்ட இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சசிகலாவிடம் வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா அவர் தெரிவித்ததற்கு மறுப்பு கூறியுள்ளார். ஆகவே ஆத்திரம் கொண்ட வினோத் கொடூரமாக அடித்தும் கழுத்தை நெரித்தும் அவரை கொலை செய்து சாலை ஓரத்தில் இருந்த முட்புதரில் சடலத்தை புதைத்துள்ளார்.
அதன் பிறகு மகன் சசிகலா காணாமல் போனதாக அவருடைய பெற்றோர் புகார் வழங்கியதை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த பொள்ளாச்சி காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது செல்போன் சிக்னலை வைத்து சசிகலாவின் காதலன் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில், கொலை செய்ததை அவர் ஒப்புகொண்டுள்ளார். அதன் பிறகு சசிகலாவின் எலும்புகள் மட்டுமே கிடைத்த நிலையில் டிஎன்ஏ பரிசோதனையில் அவர் தான் என்று உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கோவை மகிலா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சினிமாவை நெஞ்சில் விதத்தில் நடைபெற்ற இந்த கொலை வழக்கில் குற்றவாளி இனத்திற்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்யும் நோக்கத்துடன் கடத்திச் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டு காலங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஆர் நந்தினி தேவி உத்தரவு பிறப்பித்தார்.