சென்ற 1 ம் தேதி சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் 10 ம் வகுப்பு படிக்கும் போது நிஷாந்த் என்ற நபருடன் நட்பு ஏற்பட்டது அது நாளடைவில் காதலாக மாறியது. கல்லூரியில் இணைந்த பின்னரும் எங்களுடைய காதல் தொடர்ந்தது என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்திருக்கிறார் நிஷாந்த் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த இளம் பெண் அத்துடன் தன்னிடம் இருந்து 68 லட்சம் ரூபாய் வரையில் பணம் பெற்று இருக்கிறார் என்றும், குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் நிஷாந்த் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்து கொண்ட பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நான் வற்புறுத்தினேன். ஆனாலும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவர் ஏமாற்றி வந்தார் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு நடுவே சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தொழிலதிபரின் மகளுடன் நிஷாந்த்க்கு திருமணம் நடைபெற இருப்பதை அறிந்து கொண்டு அதிர்ச்சியில் உறைந்தேன் தன்னை ஏமாற்றிய நிஷாந்த் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தொழிலதிபரின் மகளுடன் நடைபெறவிருந்த திருமணமும் காவல்துறையினரால் நிறுத்தப்பட்டது. அத்தோடு போக்ஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நிஷாந்தை தேடி வந்தனர். இதனால் அவர் திடீரென்று தலைமறைவானார்.
ஆகவே அவருடைய நண்பர்களை தேடிப்பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் நிஷாந்த் காணாமல் போன அன்றைய தினம் தங்களுடன் மது அருந்திவிட்டு நண்பர் ஒருவரின் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார் எனவும், சற்று நேரத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார். என்றும் கூறப்பட்டிருக்கிறது
அதாவது அந்த குறுஞ்செய்தியில் ஏதாவது ஒரு ஏரியில் என் உடல் மிதக்கும் என்று தெரிவித்திருக்கிறார் அவருடைய கார் போரூர் ஏரிக்கரையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக நிஷாந்தின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று அவருடைய உடல் அந்த ஏரியிலிருந்து மீட்கப்பட்டது.
ஆகவே உடலை மீட்ட காவல்துறையினர் பெரியது பரிசோதனைக்காக போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த உடல் நிஷாந்தின் உடல் தான் என்பதையும் உறுதி செய்து இருக்கிறார்கள்.