தற்போது இளைஞர்களிடம் ஆபாசம் தொடர்பான காணொளியை பார்ப்பது, ஆபாசம், தொடர்பான விஷயங்களில் மூக்கை நுழைப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றனர்.
தற்போதைய இளைஞர்கள் எல்லோரிடமும் நிச்சயமாக கைபேசி இருக்கும். கைப்பேசி இல்லாத இளைஞர்களே தற்போது இல்லை என்றே சொல்லலாம் இளைஞர்களை விட சிறு குழந்தைகள் கையில் கூட செல்போன் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் இந்த செல்போனால் ஏற்படும் விபரீதம் இளைய தலைமுறையினரை பல விபரீதங்களில் சிக்க வைத்து விடுகின்றனர்.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை எடுத்துள்ள சீராப்பள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கபில் வாசன் (32). இவருடைய மனைவி ராஜாமணி (24) இந்த தம்பதியினருக்கு நவியாஸ்ரீ (5) என்ற பெண் குழந்தையும், தருண்(3) என்ற ஆண் குழந்தையும் இருக்கிறது.
கபில்வாசன் அதே பகுதியில் இருக்கின்ற சேகோ ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார். அத்துடன் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான பாலமுருகன் என்பவரின் மகன் ராகுல் (23) கபில்வாசன் வீட்டிற்கு சென்று குளிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளார்.
ஆகவே கபில் வாசனின் மனைவியான ராஜாமணி தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதத்தில் உறங்கிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை தருண் கழுத்தில் மிதித்ததோடு மட்டுமல்லாமல் அடித்து கொலை செய்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான குழந்தையின் தாயார் ராஜாமணி கூச்சலிட்டவுடன் அருகில் இருந்த உறவினர்கள் குழந்தையை தருணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கின்றனர். அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இளைஞர் ராகுலை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராகுலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில், ராகுல் தொடர்ச்சியாக ஆபாச படங்களை பார்த்ததாகவும், அதனை உறவினர்கள் கண்டித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே உறவினர்கள் தொடர்ந்து அவரை கண்டித்ததால் ஆத்திரத்திற்குள்ளான ராகுல் தன்னுடைய சித்தியின் மகனை காலால் மிதித்து கொலை செய்ததாக காவல்துறையிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 3 வயது குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த சம்பவம், ராசிபுரம் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.