fbpx

நிஃபா வைரஸ்..!! செப்.16ஆம் தேதிக்கு பிறகு..!! சுகாதாரத்துறை அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

கேரளாவில் மாநிலத்தில் நிஃபா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிபா வைரஸால் கோழிக்கோட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நிஃபா பரவலை அடுத்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது. கேரளாவில் இதுவரை 6 பேருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு, அதில் இரண்டு பேர் இறந்துள்ளனர். இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த செப்.16ஆம் தேதிக்குப் பிறகு கேரள மாநிலத்தில் புதிதாக நிஃபா வைரஸ் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “வைரஸ் தாக்குதலின் 2-வது அலை இல்லை என்பதை உறுதிப்படுத்த, மரபணு வரிசை முறை முடிவுகள் நாளை கிடைக்கும். இதற்கிடையே, மத்திய குழுக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களையும் ஆய்வு செய்து வருகின்றன.

மாநிலத்தில் கடைசியாக செப்.15ஆம் தேதி நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. செப்டம்பர் 16ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. பாலூட்டிகளில் வைரஸ் இருப்பதைக் கண்டறிய 36 வவ்வால்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

வைரல் வீடியோ: மிமிக்கிரி பண்ண இஷான் கிஷன்… "நா எப்போ கைய இப்படி வெச்சுக்கிட்டு" நக்கலடித்த விராட் கோலி…!

Mon Sep 18 , 2023
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை எளிதாக வென்று 8வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. துவக்கத்தில் பல கேள்விகளுடன் ஆசிய கோப்பை போட்டியில் கலந்த இந்திய அணி அனைத்து சவால்களையும் வென்று சாதித்து காட்டியுள்ளது. இதே வேகத்துடன் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் நடக்க இருக்கும் உலகக்கோப்பையில் பங்குபெற இருக்கிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இந்நிலையில் நேற்றைய தினம் ஆசிய கோப்பை வென்ற பிறகு […]

You May Like