fbpx

கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா? கொடூரமாக கொலை செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த தனலட்சுமி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். அந்த பகுதியில் சாலை ஓரமாக அவர் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில்தான் தனலட்சுமி 2 நாட்களுக்கு முன்னர் பூக்குளம் பேருந்து நிலையத்தில் தலையில் பலமான காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அவருடைய மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், கண்காணிப்பு கேமராவின் மூலமாக ஆய்வு நடத்தி வந்தனர்.

அந்த கண்காணிப்பு கேமராவில் ஏரிப்பாளையம் பகுதியைச் சார்ந்த ஆரோக்கியராஜ் என்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்ட தனலட்சுமியை அடித்தே கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கண்டுபிடித்து காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

கொலையாளி ஆரோக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்திய பொது அவர் மீது இதற்கு முன்னதாகவே பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததற்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆரோக்கியராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Kathir

Next Post

திருச்சியில் வாடகைக்கு வீடு பிடித்து பாலியல் தொழில்! காவல் ஆணையாளரின் அதிரடியால் சிக்கிய புரோக்கர்!

Mon Dec 5 , 2022
திருச்சி மாநகர காவல் ஆணையாளர் கார்த்திகேய,ன் வழிப்பறியில் ஈடுபடும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்பாடுகளில் தங்களை ஏற்ப்படுத்திக் கொள்ளும் குற்றவாளிகள் மற்றும் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள திருச்சி மாநகர காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு ஒரு புதிய அறிவுரையை வழங்கி உள்ளார். அதனடிப்படையில் வயலூர் ரோடு அருகே வீடு வாடகைக்கு எடுத்து இளம் பெண்களை வைத்து […]

You May Like