fbpx

“இனி முன்பணம் வழங்கப்படாது”..!! பயனர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட EPFO..!!

பிஎஃப் முன்பணம் இனி வழங்கப்படாது என இபிஎஃஓ அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, சுமார் 6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளது. பயனாளர்களின் வசதிக்காக சில மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், பயனாளர்கள் முன்பணம் பெறுவதற்கான வழிகளை எளிமையாக்கியுள்ளது. அதன்படி, கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுவது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு முன்பணம் பெற ஆட்டோ-மோட் செட்டில்மென்ட் எனப்படும் தானியங்கி முறையை அறிமுகம் செய்தது.

இதன் மூலம் பணம் எடுப்பதற்கு விண்ணப்பித்த வெறும் 3 நாட்களில் பணம் கையில் கிடைக்கும். இந்நிலையின் தான், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிபந்தனையின்றி பிஎஃப் பணத்தை முன் பணமாக எடுப்பதற்கான சலுகை இனி கிடையாது என அறிவித்துள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், இந்த சலுகை வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், இனி திருமணம், உயர்கல்வி, வீடு கட்டுமானம் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே முன்பணம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா காலக்கட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கி வந்த முன்பணம் பெறும் வசதி இனி கிடையாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Read More : ரூ.1,000 பணம் வந்தாச்சு..!! பெண்களே வங்கிக் கணக்கை உடனே செக் பண்ணுங்க..!!

English Summary

EPFO has issued a shock notification that PF advances will no longer be disbursed.

Chella

Next Post

'இது ஒரு வித்தியாசமான நகரமா இருக்கே’..!! ’நீங்க இந்த இடத்துக்கு போயிருக்கீங்களா’..? அப்படி என்ன ஸ்பெஷல்..?

Sat Jun 15 , 2024
In this post we will see about Balidhana city in Gujarat which is a vegetarian city of India.

You May Like