கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அந்த்யோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் பரிசுத்தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஓணம் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறை அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். ஏனென்றால், அரசின் மோசமான நிதி நிலை மற்றும் பணப் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசுத்தொகுப்பு வழங்க இருப்பதாக சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. தற்போது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சில பொருட்கள் இன்னும் சப்ளை டெப்போக்களுக்கு வரவில்லை. குறிப்பாக துவரம் பருப்பு, பச்சைப்பயறு, நெய், பாயாசம் கலவை, தேயிலை தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை இன்னும் வரவில்லை. இதனால், பரிசுத்தொகுப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், மேற்குறிப்பிட்ட பொருட்கள் வழங்கப்படுவது தாமதமாகியுள்ளது.
ஓணம் பரிசுத்தொகுப்பு பட்டியல்…
டீ பவுடர்: 100 கிராம்
துவரம் பருப்பு: 250 கிராம்
பச்சை பயறு: 500 கிராம்
பாயாசம் மிக்ஸ் (மில்மா): 250 கிராம்
மில்மா நெய்: 50 மிலி
சாம்பார் பொடி: 100 கிராம்
தேங்காய் எண்ணெய்: 500மிலி
மிளகாய் தூள்: 100 கிராம்
மஞ்சள் தூள்: 100 கிராம்
பட்டாணி: 250 கிராம்
உப்பு: 1 கிலோ
கொத்தமல்லி தூள்: 100 கிராம்
துணி பை: 1
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்றும் ஆகஸ்ட் 29 முதல் 31 வரை ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மகாராஷ்டிரா அரசும் அதன் பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகையன்று ஏழை மக்களுக்கு 100 ரூபாய்க்கு ரேஷன் கிட்கள் வழங்க உள்ளது. ஆனந்த் ஷிகா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவங்கப்பட்டை மற்றும் எண்ணெய்யுடன் 1 கிலோ ரவை வழங்கப்பட உள்ளது.
என்ன பொருட்கள் வழங்கப்படும்?
ஒரு கிலோ ரவை, கடலை பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை வழங்கப்படும்.