fbpx

மக்களே…! தீவிரமாகும் வடகிழக்குப் பருவமழை… வரும் 16-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…!

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மிக தீவிரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று நிலவும். இதன் காரணமாக வரும் 16-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரலாம்.

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 16, முதல் 19-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வரும் 16-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 17-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 18-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

English Summary

Northeast monsoon intensifies… A new low pressure area will form on the 16th.

Vignesh

Next Post

வந்தாச்சு அறிவிப்பு!. 2025 ஜூன் முதல் ஏடிஎம்மில் பிஎப் பணம் எடுக்கலாம்!. அமலுக்கு வரும் புதிய முறை!

Sat Dec 14 , 2024
PF: ஏடிஎம் இயந்திரத்தில் பிஎப் பணத்தை எடுக்கும் முறை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்​பில் (இபிஎப்ஓ) 7.37 கோடிக்​கும் மேற்​பட்ட உறுப்​பினர்கள் உள்ளனர். அவர்​களின் நலனுக்காக இபிஎப்ஓ 3.0 என்ற புதிய வரைவு கொள்கை வரையறுக்​கப்​பட்டு உள்ளது. இந்த வரைவு கொள்கை அடுத்த ஆண்டு ஜூனில் அமலுக்கு வரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து மூத்த அதிகாரிகள் கூறிய​தாவது, […]

You May Like